Yesu Meipa Enthan Nesa – இயேசு மேய்ப்பா எந்தன் நேசா

சரணங்கள்
1. இயேசு மேய்ப்பா! எந்தன் நேசா!
என்மேல் தயை கூரும் ஈசா!
பா மா யென்னைக் கைதூக்கி
பாது கா என் பாவம் போக்கி!
2. உம்மையே நானென்றும் நம்பி,
இம்மைப் பற்றி னின்று நீங்கி
நன்மையே என்னாளும் செய்து
நானொழுகச் செய்யும் தேவா!
3. நேற்றும் இன்றும் என்றும் மாறா
இயேசுவே என் ஜீவநாதா!
தேற்று மென்னைத் திருவருளால்
மாற்ற மில்லாதுன் பின்செல்ல
4. துன்ப ஜீவியக்கடலில்
அன்பனே! நீர் என் நங்கூரம்!
உம்மேல் கொண்ட என் விஸ்வாசம்
உறுதிகொள்ளத் தா உம் நேசா!

Leave a Comment