Vin Vaalivil Aasai – விண் வாழ்வில் ஆசை

விண் வாழ்வில்
ஆசை வைத்தல்ல
நித்திய சாவையே
நான் அஞ்சியல்ல
ஆண்டவா உம்மை
நேசிப்பேன் உம்மையே
மனுக்குலம் அனைத்தையும்
உம் குருசில் அணைத்தீர்
எனக்காய் ஆணி ஈட்டியும்
நிந்தையும் சகித்தீர்
சத்துரு நீசன் எனக்காய்
சகித்தீர், நாதரே
இரத்த வேர்வை வேதனை
வல் துக்கம் சாவுமே
என் திவ்விய நாதர்
இயேசுவை
நரக அச்சமும்
நன் மோட்ச
ஆசையும் அற்றே
நேசிப்பேன் முற்றிலும்
எவ்வீவும்
எதிர்நோக்கிடேன்
பிரதிபலனும்
என்னை மா அன்பா
நேசித்தீர்
நேசிப்பேன் நீசனும்
என் ஸ்வாமி
நித்திய வேந்தரும்
நீர் தாமே ஆகையால்
என்றென்றும்
உம்மை நேசித்து
புகழ்வேன் பாடலால்

Leave a Comment