Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை

உலக ஆசையெல்லாம்
என்னை விட்டு ஒழியணும்
நீர் ஒன்றே சொத்து என்று
துதித்து மகிழணும் – 2

என் வார்த்தையெல்லாம்
உம்மை உயர்த்தணும்
என் வாழ்க்கையும் கூட
உமக்காய் இருக்கணும்

இன்னும் என்னை சிட்சியும்
தேவனே
உமக்காய் ஜொலிப்பதே என்
ஆசையே – 2 – உலக ஆசையெல்லாம்


உமக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவை பிரிக்கும்
செல்வம் புகழோ,உறவோ
எதுவும் வேண்டாமே – 2
தகப்பனின் சந்நிதியில்
தினம் தினம் தரித்திருக்கும்
தவமே பெரிதென்று வாழ வேண்டும் -2 – இன்னும் என்னை


வெளி வேஷமெல்லாம்
என்னை விட்டு விலகணும்
உம் வஸ்திரம் என்னை
முழுதும் மூடணும்
என் சிந்தை செயலும் வெளி தோற்றமெல்லாம்
உம் அன்பை மட்டும்
வெளி காட்ட வேண்டுமே
தகப்பனே உம் அன்பை
விவரித்து சொல்லி மகிழ்ந்து
வாழ்வின் இறுதி வரை
ஓட வேண்டும்
(என் இறுதி மூச்சை விட வேண்டும் ) – இன்னும் என்னை


LYRICS:

Ulaga aasaiyellam ennai vitu oliyanum
Neer ondrae sothu endru thuthithu magilanum (2)

En varthai ellam ummai uyarthanum
En vazhkaiyum kooda umakaai irukanum

Innum ennai sitchiyum devanae umakai jolipathae en aasayae (2)

Ulaga aasai ellam ennai vitu oliyanum
Neer ondrae sothu endru thuthithu magilanum!

Umakum enakum edayae irukum uravai pirikum selavam pugalo uravo ethuvum vendamae (2)
Thagapanin sannithiyil thinam thinam tharithirukum thavamae perithendru vazha vendum (2)

Innum ennai sitchiyum devanae
Umakaai jolipathae en aasaiyae

Veli vesamellam ennai vitu vilaganum
Um vasthiram ennai muzhuthum moodanum

En sinthai seiyalum veli thotramellam um anbai mattum veli kaata vendumae(2)

Thagapanae um anbai vivarithu solli magilnthu vaazhvin iruthi varai oada vendum
Thagapanae um panbai vivarithu solli magilnthu en iruthi moochai naan vida vendum

Innum ennai sitchiyum devanae
Umakaai jolipathae en aasaiyae (2)

 

Leave a Comment