தயாபரா கண்ணோக்குமேன்-Thayapara Kannokumean

1. தயாபரா! கண்ணோக்குமேன்!
உம்மாலேயன்றி சாகுவேன்!
என் சீரில்லாமை பாருமேன்!
என் பாவம் நீக்கையா!

பல்லவி

என் பாவம் நீக்கையா!
என் பாவம் நீக்கையா!
உம் இரத்தமே என் கதியே
என் பாவம் நீக்கையா!

2. என் பாவ ஸ்திதி அறிவீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
அசுத்தம் யாவும் போக்குவீர்
என் பாவம் நீக்கையா! – என்

3. மெய் பக்தி ஒன்றுமில்லையே!
நற்கிரியை வீண் பிரயாசமே!
உம் இரத்தத்தினிமித்தமே
என் பாவம் நீக்கையா! – என்

4. இதோ உம் பாதமண்டினேன்
தள்ளாமற் சேர்த்துக் கொள்ளுமேன்!
என்றைக்கும் பாதுகாருமேன்
என் பாவம் நீக்கையா! – என்

Leave a Comment