Salvation Army Tamil Songs

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி

1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி என் ராஜா மாண்டாரோ? ஏழைப் புழு எனக்காக ஈன மடைந்தாரோ? பல்லவி என்னை நினைத்திடும் நாதா என்னை நினைத்திடும் உம் கஸ்திகளை எண்ணியே என்னை நினைத்திடும் 2. என் பாவத்தினாலல்லவோ அவர் கஸ்திப்பட்டார் அற்புதமாம் அன்பல்லவோ ஆரிதை மறுப்பார் – என்னை 3. வெயில் மறைந்திருண்டதே ஒளியும் போனதே பாவிகளாம் மானிடர்க்காய் சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை 4. நேசரே இதற்கு ஈடாய் நீசன் நான் என் […]

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி Read More »

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae

இருள் போன்ற நேரத்திலே இருள் போன்றநேரத்திலே ஓர் சத்தம் கேட்குது தேவ சுதன் தோட்டத்திலே நொந்து ஜெபிப்பது கெத்சமனேயில் விம்மி அழுது ஜெபப்போரில் மீட்பர் வேர்வை இரத்தத்தைப்போல் விழுது நேசமானஉம் மகனே வாதைகுள்ளானாரே பிதாவே, உன் சித்தந்தானே ஆகட்டும் என்றாரே எனக்காய் நீர் வேண்டுகிறீர் நானதைக் கேட்கிறேன் என் இயேசுவே! பாவி வாறேன் ஏற்றுகொள்ளு மென்னை Erul Pontra nerathilae English lyrics Erul pontra nerathilae oor satham ketkuthu deva suthan thottathilae nonthu jebipathu kethsamanayilae vimmi azhuthu jebaporil

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae Read More »

Maganae Un Nenjenakku Thaaraayoe – மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ

Maganae Un Nenjenakku Thaaraayoe? – Motcha Vaazhvai Tharuvaen Ithu Paaraayoe? 1. Akathin Asuthamellaam Thudaippaenae – Paava Azhukkai Neekki Arul Koduppaenae 2. Un Paavam Mutrum Pari Karippaenae – Athai Unmaiyaay Akatra Yaan Mariththaenae 3. Paavam Anaithumae Vittoedaayoe? – Nithya Parakathi Vaazhvai Inrae Thaedaayoe? 4. Ulaga Vaazhvinai Vittakalvaayae – Makaa Uvappaay Kathi Eevaen Makizhvaayae 5. Unthan Aathumaththai

Maganae Un Nenjenakku Thaaraayoe – மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ Read More »

Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் சரணங்கள் 1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த 3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே வாதையில் நீரே – என் பாதையில்

Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Read More »

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில்

1. கல்வாரி சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார் மானிடரிதயத்தில் நன்மாறுதல் செய்திட மாசற்ற ஜீவ நதி பாவம் போக்கத் திறந்தீர் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் பல்லவி அக்கல்வாரி! அக்கல்வாரி! எனக்கேசு மரித்தார் கல்வாரி சிலுவையில் 2. இவ் வற்புத அன்புதான் மீட்பருக்கு எந்தனை முழு தத்தஞ் செய்யத்தான் ஆவி ஆத்துமா தேகத்தை சர்வாங்க பலியாக இயேசுவே படைக்கிறேன் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி 3. நானுமக்குச் சொந்தமே என்னை ஏற்றுக்கொள்ளுமேன் நேச மீட்பர்

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில் Read More »

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன்

வாஞ்சையான நெஞ்சத்துடன் தேவசுதன் தொங்கி மாண்ட சிலுவையைக் கண்டவுடன் தொய்ந்திடுதே எந்தனுள்ளம் இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு நான் தான் என்ற ஆங்காரமும் லௌகீக ஆசாபாசமும் என் உள்ளத்தில் சங்கரியும் தேவே! நீரே வாசஞ் செய்யும் – இரத்தத்தில் பார்! நேசர் கை கால் தலையில் ஓடும் அன்பின் துக்க நதி! ஆம் பாவி! பாவ வலையில் தப்பப் பாயும் ஜீவநதி – இரத்தத்தில்

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன் Read More »

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார்

1. பேரன்பர் இயேசு நிற்கிறார்     மகா வைத்தியனாக      கடாட்சமாகப்  பார்க்கிறார்      நல் நாமம் போற்றுவோமே விண்ணில் மேன்மை பெற்றதே     மண்ணோர்க் கின்பமாகவே     பாடிப்போற்றும் நாமமே     இயேசு என்னும் நாமம் 2. உன் பாவம் யாவும் மன்னிப்பேன்     அஞ்சாதே என்கிறாரே;     சந்தேகங் கொண்டு சோர்வதேன்?     மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில்  3. உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே      மேன்மை உண்டாவதாக!         நேசிக்கிறேன் இயேசு நாமம்     நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் 4. குற்றம் பயம் நீக்கும் நாமம்     வேறில்லை இயேசுவே தான்!     என் ஆத்மா பூரிப்படையும்     அந்நாமம் கேட்கும்போது – விண்ணில் 

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார் Read More »

அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey

1. அன்பு மிகும் இரட்சகனே இன்பமுடன் சேர்த்தீ ரென்னை; உன்னதா வுந்தன் முன் எந்தன் மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில் பாரும் பாதை தனில் விழாமல் தாரும் உந்தன் கிருபை மிக பாரம் மிகும் சோதனையில் 3. கை விடமாட்டேனென்று மெய்யாகவே வாக்களித்தீர்! ஐயா நீர் என்னருகிருக்க நேயா துன்பம் இன்பமாமே

அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey Read More »

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai

1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளைவிதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே பல்லவி அரிக்கட்டோடே அரிக்கட்டோடேசேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே 2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்குளிர் பனி கூதல் பயப்படாமல்வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai Read More »

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney

அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே! இயேசு மெய்யனே! மா தூயனே – திருச்சுதனே! சரணங்கள் 1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன் துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்! சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன், சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனே பரிசுத்தனே! என தத்தனே! – அன்பிற் 2. மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானே என்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே; உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே! வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவ சுதனே!

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney Read More »

அன்பரே! நானும்மில் – Anbarey naan ummil

1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன் துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே பல்லவி நேசிக்கிறேன் நானும்மை நேசித்து சேவிப்பேன்! தாசனென் யாவையுமே தாறேன் மீட்பா! 2. உம் தொனி கேட்க நான் என்றும் வாஞ்சிக்கிறேன் உம் சித்தமே செய்ய தினம் ஆசிக்கிறேன்! 3.நானும் சொந்தமதால் உம்மை நேசிக்கிறேன்! நீரென் சொந்தமதால் வேறெதும் ஆசியேன்!

அன்பரே! நானும்மில் – Anbarey naan ummil Read More »

அனுசரிக்க தேவா- Anusarikka deva

1. அனுசரிக்க தேவா அனுதினம் போதியும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 2. அன்புடனே சேவிப்பேன் இன்பம் ஈயும் அதுவே என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 3. நீர் சென்ற பாதை செல்ல பார்த்திபா போதித்திடும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 4. காட்டுவேன் என் நேசத்தை சாட்சியால் இப்பாருக்கே என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன்

அனுசரிக்க தேவா- Anusarikka deva Read More »