Song : 01
பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களி கூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்திப் பாட வாருங்கள்.
யெகோவா தாம் மெய்த்தேவனே
நாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்
நாம் ஜனம் அவர் ராஜனே
நாம் மந்தை அவர் மேய்ப்பனார்
கெம்பீரித்தவர் ஆலயப்
பிரகாரத்துள்ளே வாருங்கள்
மகிழ்ந்து அவர் திவ்விய
நல் நாமத்தை கொண்டாடுங்கள்
கர்த்தர் தயாளர் இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே
Poolokaththaarae Yaavarum
Karthaavil Kazhi Koorungal
Ananththathodae sthothiram
Seluthi Paada Vaarungal
Yakova thaam meidhivanae
Naam Alla Avar sirustithaar
Naam Janam Avar Raajanae
Naam Manthai Avar Meipanaar
Kempeeriththavar Aalaya
Pirakarathullae vaarungal
Maglindhu Avar Dhiviya
Nal Naamathai kondadungal
Karthar Thayaalar Irakkam
Avarukku Entrum Ullathae
Avar Anaathi sathiyam
Maaramal entrum Nirkumae.