Perugu perugu Seeyonae – பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்

1. பெருகு, பெருகு,
சீயோனே சன்மார்க்கத்தில்;
முற்சிநேகத்தை விடாதே;
கிறிஸ்துக்குள் வேரூன்றி நில்;
அசதிக் குணம் ஆகாதே;
நீ இடுக்க வாசற்குட்பட்டு
பெருகு, பெருகு.
2. உத்தரி, உத்தரி
சீயோனே, இக்கட்டுக்கு
நீ அஞ்சாமல், சாவுமட்டும்
நல்ல உண்மையாயிரு;
ஜீவ கிரீடம் லக்காகட்டும்
நிந்தை யாவையும் அநுபவி,
உத்தரி, உத்தரி.
3. உன்னைக் கா, உன்னைக் கா,
சீயோனே, நீ உலகின்
வாழ்வை மேன்மையை எண்ணாதே
நீ பழைய சர்ப்பத்தின்
ஆளுகைக்குக் கீழாகாதே;
லோக இன்பத்தை வெறுப்பாய்ப் பார்
உன்னைக் கா, உன்னைக் கா.
4. சீர் அறி, சீர் அறி,
சீயோனே, உன் மனதை
இந்த அந்தப் பக்கமாக
சாய ஏவும் ஆவியை
பின் செல்லாதிருப்பாயாக
நேரே போ, யாவையும் நன்றாய் நீ
சீர் அறி, சீர் அறி.
5. தேறிப்போ, தேறிப்போ ,
சீயோனே, பலப்படு;
மற்றோர் போலே செத்திராதே
கிறிஸ்துக்குள் செழித்திரு.
மாயம் வேஷமும் போதாதே
ஜீவனும் பலமும் வேண்டாமோ?
தேறிப்போ, தேறிப்போ.
6. ஏகிப் போ, ஏகிப் போ,
சீயோனே, வெளிப்படு;
உன் பர்த்தாவின் மேன்மை காண
இந்த வேளை ஏற்றது;
நன்மை செய்யத்தக்கதாக
கதவு திறந்ததல்லவோ
ஏகிப் போ, ஏகிப் போ.
7. தொய்யாதே, தெய்யாதே,
சீயோனே, உன் சீரைக் கா;
வெதுவெதுப்பாயிராதே,
பந்தயத்தை நோக்கிப் பார்
போ, பின்னானதை எண்ணாதே;
சீயோனே, கடை இக்கட்டிலே
தொய்யாதே, தொய்யாதே.

Leave a Comment