Kiristhuvin Ratham Neethiyum – கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்

1.கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்
என் அலங்காரம் சால்வையும்;
அதை உடுத்திட்டடியேன்
தெய்வாசனத்தின்முன் நிற்பேன்.
2.என் ஆத்துமத்தை ரட்சிக்க
மரத்தில் ரத்தம் சிந்தின
தெய்வாட்டுக் குட்டியானவர்
என் கர்த்தர். என் இரட்சகர்.
3.அவரின் ரத்தம் யாவிலும்
உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்;
அதென்றைக்கும் பரத்திலே
செல்லும் மெய் மீட்புப் பொருளே.
4.அவர் ரட்சிப்பின் பலனாய்,
அவர்க்கு நான் மா உண்மையாய்
உழைத்தெப்பாவங்களுக்கும்
முற்றும் மரித்துத் தேறினும்,
5.நான் அவரண்டை செல்லவே,
இதை எல்லாம் நான் எண்ணாதே,
“மா ஏழைப்பாவி அடியேன்,
நீர் மீட்டீர், சேர்த்திடும்” என்பேன்.
6.“தெய்வீக மைந்தா, இயேசுவே,
மனிதனாய் நீர் ஜென்மித்தே,
உயர்ந்த விலைக்கென்னையும்
கொண்டீர்” என்றே நான் போற்றவும்.

Leave a Comment