Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென்

Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென்

காலா காலமாய் நேசரென் இயேசுவே
ஞாலமகிலவும் உம் புகழ் சாற்றுவேன்
கானக வழியதில் ஜீவ ஒழியாய்
காருண்யனே என்னையும் கருத்தாய் காத்தீரன்றோ

இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்?
நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதை காட்டி காத்திடும் என் தீபமும் நீரே

பாதை தவறியே மாய்ந்த எந்தனுக்காய்
பாதை சத்தியம் ஜீவனாய் உதித்தே
மன்னித்து மறந்தீர் என் பாவம் அனைத்தும்
மந்தையில் சேர்த்தீரன்றோ தந்தையே உமக்கென் செய்குவேன்

பொன்னும் வெள்ளியும் அக்கினிச் சூளையில்
புடமிட்டு சுத்தம் செய்திடுவது போல்
உபத்ரவத்தன் குகையில் சோதித்தென்னை
உத்தமனாய் நிறுத்த தெரிந்தெடுத்தீரன்றோ

துரைத்தனம் அதிகாரம் வல்லமையும்
திருச் சபைக்கெதிராய் போராடிடுதே
திடன் அடைந்து தைர்யமாய் போராடிட
ஆவியின் பெலன் ஈந்திடும் உம்மோடு ஜெயம் பெறவே

உமக்கு பயந்து உம் நாமம் தியானிப்போரை
உமக்காய்ச் சேர்த்திட நேசர் நீர் வருவீர்
உமது சம்பத்தைக் கடாட்சிக்கும் நாளில்
உம்முடன் இயேசுவே நான் சீயோனில் சேர்ந்திடுவேன்

 

1 Kaala kaalamaai neasaren Yesuvay
Njaalamagilavum um pugal saatuvein
Kaanaga valiyadhil jeeva oliyaai
Kaarunyanay ennaiyum karuthaai kaatheerandro

Yesuvay neer endhan patchamaanadhaal
Enakedhiraai iruppavan yaar?
Nal aayanum neeray nal neiyanum neeray
Neer paadhai kaati kaathidum en theebamum neeray

2 Paadhai thavariyay maaindha endhanukaai
Paadhai sathiyam jeevanaai udhithay
Mannithu marandheer en paavam anaithum
Mandhaiyil seirtheerandro thandhaiyay umaken seivein

3 Ponnum velliyum akkini soolaiyil
Pudamittu sutham seidhiduvadhu poal
Ubathravathin kugaiyil soadhithennai
Uthamanaai nirutha therindhedutheerandro

4 Thuraithanam adhigaaram vallamaiyum
Thiru sabaikedhiraai poaraadidudhay
Thidan adaindhu dhairyamaai poaraadida
Aaviyin belan eendhidum ummoadu jeyam peravay

5 Umakku bayandhu um naamam dhyaanipoarai
Umakkaai seirthida nesara neer varuveer
Umadhu sambathai kadaatchikkum naalil
Ummudan Yesuvay naan Seeyoanil seirndhiduvein

Leave a Comment