எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார்
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்கிறார்
கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேன்
அவரே என் பெலன்
கர்த்தரின் காருண்யம்
என்னை பெரியவனாக்கினது-2
1.என் ஆத்துமாவை மரணத்துக்கும்
கண்களை கண்ணீருக்கும்
என் கால்களை இடரலுக்கும்
தப்புவிக்கும் தேவன் அவர்-2-கர்த்தருக்குள்
2.என் கொம்பை காண்டா மிருகத்தின்
கொம்பைப்போல் உயர்த்துகிறீர்
புது எண்ணெய் அபிஷேகம்
தினம் செய்து நடத்துகிறீர்-2-கர்த்தருக்குள்
3.கிறிஸ்துவுக்குள் அவரோடு
உயிரோடு எழுப்பினார்
உன்னதங்களில் என்னை
உடக்காரவும் செய்தார்-2-கர்த்தருக்குள்