En Kalippukku Kaaranam – என் களிப்புக்குக் காரணம்

1.என் களிப்புக்குக் காரணம்,
என் நல்ல நாதரே;
பகலில் நீர் என் மகிமை,
ராவில் என் ஜோதியே.
2.இருளிலே நீர் தோன்றினால்
என் மனம் மகிழும்;
நீர் விடிவெள்ளி, ஆனதால்
என்னில் பிரகாசியும்.
3.இயேசுவைத் தந்த தயவு
என் செல்வமானதால்,
என் ஆத்துமா சந்தோஷித்து
மகிழும் வாழ்வினால்.
4. நரகத்துக்கும் சாவுக்கும்
அஞ்சாமல் இருப்பேன்;
தெய்வன்பும் விசுவாசமும்
கொண்டு நான் வெல்லுவேன்.

Leave a Comment