1. தேவன் தங்கும் எந்த வீடும்
திருப்பதி யாகும்;
பரம ஆறுதல் ஐக்யம்
அன்பும் பெற்று வாழும்!
2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம்
ஆக்கும் வீடு மோட்சம்;
காலை பாலர் இயேசைப் போற்ற
களித்தென்றும் வாழும்!
3. ஜெபத் தொனி கேட்கும் வீடு
செழித்து வாழுமே;
ஜீவ வேதம் வாசிப்பொரும்
மேல் நோக்கி வாழ்வரே!
4. கர்த்தாவே! எங்கள் வீட்டிலும்
நித்தம் நீர் தங்கிடும்
உத்தம மனதோடும் மேல்
பக்தி தந்தருளும்!