1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.
2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,
குன்றாத தீரமும் தந்தருளும்.
3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.