Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே
அழகே பூரண அழகே
என் உயிரின் உயிரான இயேசுவே
இனிமை தேனிலும் இனிமை என்றென்றும் உந்தன் பெயரே
உமக்கு நிகர் யாரும் இல்லையே
நீர் ஒருவர் வேறே தெய்வம் இல்லையே
வருவேன் உம் சன்னதி தேடி
மகிழ்வேன் உம் புகழை பாடி .
1.வழி சத்யம் வாழ்வு என்றும் நீர் தானே
ஒளி நித்யம் வாழ்வு என்றும் நீர் தானே – 2
கைப்பிடி மண் எடுத்து என்னை வனைந்தவர் நீர் தானே
உம் உள்ளங்கைகளிலே என்னை வரைந்தவர் நீர் தானே
என் இதய துடிப்பும் நீர் தானே
என் சுவாச காற்றும் நீர் தானே – 2 .
2. ஆவி ஆத்மா உடல் என்றும் நீர் தானே
வாழ்வில் நல்ல பாதை என்றும் நீர் தானே
முள்தனில் கண்டெடுத்து
என்னை அணைத்தவர் நீர் தானே
சேற்றினில் தூக்கி எடுத்து
என்னை பிரித்தவர் நீர் தானே
என் காவல் கோட்டை நீர் தானே
என் வீடும் அரணும் நீர் தானே – 2