Athikalai Neram – அதிகாலை நேரம்

Athikalai Neram – அதிகாலை நேரம்

அதிகாலை நேரம்
உமக்கான நேரம்-2
புது ஜீவன் புது பெலன்
பெற்றுக்கொள்ளும் நேரம்
கிருபைகள் உம் இரக்கங்கள்
பொழிந்திடும் நேரம்
இதுவே…நிதமே…

நான் தேடும் முதல் முகம்
உந்தன் முகமே…
நான் கேட்கும் முதல் குரல்
உந்தன் குரலே…
என் நாவு பாடி மகிழ்வதும்
உந்தன் நாமமே
என் கண்கள் தேடும் வார்த்தையும்
உந்தன் வசனமே-அதிகாலை

நாள் எல்லாம் கிருபைகள்
தொடர செய்யுமே
நான் உந்தன் சாட்சியாய்
நிற்க செய்யுமே
எந்தன் சிந்தை செயல்கள் யாவுமே
காத்துக்கொள்ளுமே
என் எல்லை எங்கும் பரிசுத்தம்
என்று எழுதுமே-அதிகாலை

 

Leave a Comment