Antoru Naal Nam ThiruNaal – அன்றொரு நாள் நம் திருநாள்

மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ்

அன்றொரு நாள் நம் திருநாள்
அன்பு பாலனை வரவேற்க
குளிர் நிலவு பொழிகிறது
விடி வெள்ளி முளைக்கிறது
பனித் துளிகள் காத்திருக்க
ஒளி வட்டம் தோன்றியது
காலம் தாண்டி வானவில் தோரணமானது
இரவில் விடியல் பிறக்கிறது
வாழ்வின் இருளும் அகழ்கிறது
வெண்ணிலா மண்ணிலே வந்ததே
நெஞ்சில் எண்ணிலா ஆனந்தம் பொங்குதே
இது கேட்குதா கேட்குதா டிங் டாங் பெல்
வந்தெனை மோதுதே டிங் டாங் பெல்

சரணம் – 1

இறை பாலன் தோன்றினார் நமக்காக தோன்றினார்
ஒளி வீசும் ஜோதியாய் உலகாளப் போகிறார்
தோமை அகல மாயை மறைய உன் நாமம் பாடுவேன்
தூய உலகை ஆளும் தேவா உன் நாமம் பாடுவேன்

மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ்


சரணம் – 2

தேவைகள் ஆசைகள் எத்தனை உண்டு
இன்று அத்தனை ஆசையும் தீர்ந்தது இன்று
ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமின்றி
இங்கு ஆரம்பம் ஆனது வாழ்க்கையும் இன்று

பரிசுத்தன் தோன்றினார் நமக்காய் தோன்றினார்
அருள் கூறும் நாதனாய் அன்பாலே அணைக்கிறார்
பாவம் விலக பாதை தெரிய உன் நாமம் பாடுவேன்
தேவ கிருபை நாளும் அருள உன் நாமம் பாடுவேன்

மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ்

Leave a Comment