Aathumavae Theenguku thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப

1.ஆத்துமாவே, தீங்குக்குத்
தப்பத் தக்கதாக,
நீ விழித்துத் தொழுது
கெஞ்சிக் கொள்வாயாக;
ஏனென்றால்
சாத்தானால்
உனக்கெந்தத் திக்கும்
சோதனைகள் நிற்கும்.
2.உன்னில் பாவ நித்திரை
முன் தெளிய வேண்டும்;
பாவ நஞ்சின் இனிமை,
தேடும் உன்னை மீண்டும்,
விலகு,
சீர்ப்படு;
சாவுன்னை மெய்யாகச்
சேரும், தூங்காயாக.
3.நீ விழித்தெழுந்திரு,
மோசத்தை விட்டோடு,
கண் தெளிய, அதற்கு
நீ கலிக்கம் போடு;
இவ்விதம்
ஆத்துமம்
கர்த்தரால் தாயையும்
ஒளியும் அடையும்.
4.என்றாலும் பிசாசினி
சோதிக்க ஓயாதே
என்றறிந்து நீ விழி,
அசதியாகாதே,
ஏனென்றால்
தூங்கினால்
சோதனை பலக்கும்
தண்டனை பிறக்கும்.
5.லோகம் உன்னை மீளவும்
வெல்லத்தக்கதாக
இன்பம் துன்பம் காண்பிக்கும்,
நீ விழிப்பாயாக;
ஜாதியார்,
இனத்தார்
வீட்டாராலே தானும்
எத்தோர் வேளை காணும்.
6.சுய நெஞ்சுத் த்ரோகியே,
தம்பிரானை விட்டு
சோரம் போகச் சாருமே,
பைத்தியம் பிடித்து
மெத்தவும்,
சீர் கெடும்;
அதற்கெதிராக
நீ விழிப்பாயாக,
7.இப்படி விழிக்கையில்
நீ ஜெபமும் பண்ணு;
உன்னைச் சோதனைகளில்
ஆதரித்தன்றன்று
பாரத்தைக்
கண்ணியை
நீக்கிப் போடக் கர்த்தர்
ஒருவர் சமர்த்தர்.
8.வாங்க மனமுண்டானால்
கேட்கத் தேவையுண்டு;
கர்த்தரின் சகாயத்தால்
நாம் நிலைத்திருந்து,
போரிலே
வெல்லவே
ஏற்ற எத்தனங்கள்
உக்கிர ஜெபங்கள்.
9.தேவ மைந்தன் நாமத்தில்
கர்த்தரை மெய்யாகத்
தொழுது கொண்டோமாகில்,
பூரண அன்பாகச்
சகல
நில்வர
ஈவையும் அளிப்பார்,
நித்தமும் ரட்சிப்பார்.
10.ஆகையால் நெருக்கமும்
சாவும் ஞாயத் தீர்ப்பும்
வரும்போ தொத்தாசையும்
ஆறுதலும் மீட்பும்
காணவே,
நித்தமே
வேண்டிக்கொள்வாராக,
நாம் விழிப்போமாக.

Leave a Comment