1.ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருனாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ
அருரூபா
2 மாகமண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுலாசா நமோ நமோ வான சங்கம விஸ்வாசா நமோ நமோ
மனுவேலா
3 நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ
நரதேவா
4 ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ ஏசு வென்ற திருநாமா நமோ நமோ
இறையோனே