ஆ, திரியேக ஸ்வாமியே,
துணை செய்தன்பாய்க் காரும்;
பாவம் நீக்கும், கர்த்தரே,
நல் மரணத்தைத் தாரும்;
பேயின் சூதைத் தவிரும்;
மெய் விசுவாசமாக
இருக்கிறதற்காக
வரம் அளிப்பீராக,
உம்மை நம்பப் போதியும்;
பிசாசு அம்பை எய்யும்
எச்சோதைனையிலேயும்
நீர் அனுகூலம் செய்யும்.
ஆமேன், அது நிச்சயம்,
தயாபரர்க் கிஸ்தோத்திரம்.