Aa Neethiyulla Kartharae – ஆ நீதியுள்ள கர்த்தரே

1.ஆ, நீதியுள்ள கர்த்தரே
வெளி வறண்டதாலே
எச்சீவனும் வதங்குதே.
இத் துன்பம் எங்களாலே
நடந்த பாவத்தின் பலன்
என்றெங்களில் அவனவன்
துக்கித்துச் சொல்ல வேண்டும்.
2.ஆ, எங்கள் மீறுதல்களை
இரக்கமாய் மன்னியும்,
நீரே அடியார் நம்பிக்கை.
சகாயத்தை அளியும்;
கர்த்தாவே, சுத்த தயவால்
மழையைத் தந்து, அதினால்
நிலத்தைப் பூரிப்பாக்கும்.
3.தயாபரா, நீர் உமது
உடன்படிக்கைக்காக
ரட்சித்து, காய்ந்த பூமிக்குத்
தண்ணீர் இறைப்பீராக;
ஆகாயத்தின் கர்த்தரே நீரே,
மழையை உம்மை அன்றியே
யார் பெய்யப் பண்ணக்கூடும்.
4.மூச்சற்ற விக்ரகங்களால்
ஆகாதே; தேவரீரே
பாரத்தை உமது கையால்
விரித்தீர்; அதில் நீரே
அளவில்லாமல் ஆள்பவர்;
நீரே பிதா, நீர் ரட்சகர்;
உம்மாலே யாவும் ஆகும்.

Leave a Comment