Aa Mesiyavae Vaarum – ஆ மேசியாவே வாரும்

1. ஆ மேசியாவே வாரும்
தாவீதின் மா மைந்தா!
பார் ஆள ஏற்ற காலம்
நீர் வந்தீர் மா கர்த்தா;
சிறைகளையே மீட்டு
கொடுங்கோல் முறிப்பீர்.
சிறப்பாய் நீதி செய்து
பாவமும் போக்குவீர்.
2. நிஷ்டூரம் யாவும் நீக்கி
சகாயம் நல்குவீர்;
கஷ்டத்தில் ஏழை தேற்றி
நல் பலம் ஈகுவீர்;
மாய்வோர் திரளை மீட்டு
களிப்பால் நிரப்பி,
உய்விப்பீர் ஒளி ஈந்து
இருளை அகற்றி.
3. நல் மாரிபோல் நீர் வாரும்
இப்பூமி செழிக்க
நம்பிக்கை மகிழ்வன்பும்
எங்கெங்கும் மலர
நாதர் முன்தூதனாக
நற் சமாதானமும்
நீதியும் நதியாக
எங்கெங்கும் பாய்ந்திடும்.
4. விழுவார் தாழ்ந்து வேந்தர்
பொன் போளம் படைத்தே
தொழுவாரே, பார் மாந்தர்
துதித்துப் பாடியே,
ஓயா மன்றாட்டு ஸ்தோத்ரம்
சமுகம் ஏறிடும்;
ஒழியாதோங்கும் ராஜ்யம்
என்றும் நிலைத்திடும்.
5. மாற்றார் எல்லாரும் மாய
மாண்பாக ஆளுவீர்
பேற்றின்மேல் பேறுண்டாக
ஆண்டாண்டும் ஆளுவீர்;
நிற்கும் ஓயாத காலம்
உமது ஆணையே,
அன்பாம் உமது நாமம்
ஆம், சதாகாலமே.

Leave a Comment