1. விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே மரியம்மை புதல்வனாய் அவதரித்தார்
பல்லவி:
ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை வாழ்த்திடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச் சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்.
2. மந்தையை காக்கும் மேய்ப்பர்களும் சாஸ்த்ரிகள் மூவரும் வந்தனரே
புல்லனைப் பாலனை கண்டனரே பொன் போளம் தூபமும் படைத்தனரே.
3. பெத்லகேம் ஊரில் ஏழைக் கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் மன்னாதி மன்னன் தம் மனுவேலனே.