1. வானதூதர் சேனை போற்றும் யேகோவா
மங்களம் மீதோங்க ஆசி கூறுமேன்
ஞான மணவாளன் இயேசு நாதனை
நாமும் வாழ்த்தி பாடுவோம் எந்நாளுமே
வாழ்த்திப் பாடுவோம்
நம் இராஜன் நேசர் இயேசுவை
வாழ்த்திப் பாடுவோம்
இம்மன்றல் என்றும் ஓங்கவே.
2. தூதர்சேனை கீதம் பாட ஏதேனில்
ஆதாமோடு ஏவாள் மாதை ஒன்றாக்கி
ஆதி மன்றலாட்டி ஆசி கூறினார்
இந்த மன்றலர்க்கும் ஆசி கூறுவார்.
3 . சீர் பாக்கிய தானம் பெற்று பாரிலே
சீரும் செல்வம் தேவா பக்தி மேவியே
மாயமற்ற அன்போடிவர் எந்நாளும்
மலர் பாதம் போற்றி நீடு வாழ்கவே
4. வாழ்க பெற்றோர் உற்றோர் அன்பு நேசரும்
வாழ்க தம்பதிகள் நெடுங்காலமாய்
வாழ்க (மணமகன்) (மணமகள்) எந்நாளும்
வாழ்க தேவ தயவோடு க்ஷேமமாய்.